ADDED : பிப் 11, 2025 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர தர்ணா போராட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். மாநிலச்செயலாளர் நீதிராஜா, மாவட்டச் செயலாளர் அப்துல் நஜ்முதீன் முன்னிலை வகித்தனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
21 மாத ஊதிய நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, சரண்விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கோஷமிட்டனர்.
மாவட்டப் பொருளாளர் முனீஸ்பிரபு, முன்னாள் மாவட்டச் செயலாளர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

