/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிச்சைமூப்பன் வலசை கடற்கரையில் பா.ஜ.,வினர் நடத்திய துப்புரவுப் பணி
/
பிச்சைமூப்பன் வலசை கடற்கரையில் பா.ஜ.,வினர் நடத்திய துப்புரவுப் பணி
பிச்சைமூப்பன் வலசை கடற்கரையில் பா.ஜ.,வினர் நடத்திய துப்புரவுப் பணி
பிச்சைமூப்பன் வலசை கடற்கரையில் பா.ஜ.,வினர் நடத்திய துப்புரவுப் பணி
ADDED : பிப் 01, 2024 07:08 AM
கீழக்கரை : கடலாடி கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் பிரதமரின் ஸ்வச் பாரத் நிகழ்ச்சியின் மூலம் துாய்மை இந்தியா திட்டத்தில் ஏர்வாடி அருகே பிச்சைமூப்பன் வலசை கடற்கரையில் துாய்மைப் பணி நடந்தது.
மன்னார் வளைகுடா பிச்சை மூப்பன் வலசை கடற்கரையில் கிடந்த பாலித்தீன் பை மற்றும் மக்காத குப்பையை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
பா.ஜ., கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கிழக்கு ஒன்றிய பார்வையாளர் ராமசாமி, கிளை தலைவர் முத்துக்குமார், சிக்கந்தர் அலி, மீனவர் பிரிவு ஒன்றிய தலைவர் ராமர், தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட துணைத் தலைவர் கலைவாணி, மீனவர் பிரிவு ஒன்றிய துணைத் தலைவர் சக்தி முருகன், ஒன்றிய துணைத் தலைவர் கோகிலா, நிர்வாகிகள் சந்திரசேகரன், பாண்டி செல்வம், பாண்டியம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.