/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் துாய்மைப் பணி தேவை மழைக்கால தொற்று நோயை தடுக்கலாம்

ADDED : டிச 06, 2024 05:23 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி, கடலாடி, மண்டபம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளை முறையாக துாய்மை செய்து அவற்றில் குளோரினேசன் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் முன்வர வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சமீபத்தில் பெய்த மழையால் ஊருணிகள், குளம், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரித்துள்ள நிலையில் பெருவாரியான கிராமங்களில் தெருக்களில் உள்ள கழிவு நீரும் நீர் நிலைகளில் கலந்து வருகிறது.
இந்நிலையில் காவிரி நீர் மற்றும் ஊராட்சியில் உள்ளூர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் மேல்நிலை நீர் தொட்டிகளில் முறையாக துாய்மை செய்து அவற்றை பராமரிக்க வேண்டும்.
குடிநீரில் கழிவுநீர் கலந்து நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்க உரிய முறையில் குளோரினேசன் மற்றும் ப்ளீச்சிங் பவுடர் தெளித்தும் முறையாக பராமரிப்பு செய்ய அறிவுறுத்தப்பட வேண்டும்.
லாரி மற்றும் டேங்கர்களிலிருந்து இருந்து தண்ணீர் வினியோகம் செய்யும் போது மக்களின் நலன் கருதி முறையாக சுத்தம் செய்தும் கொசுக்கள், லார்வா உற்பத்தி இல்லாதவாறும், தேங்காதவாறு உடனுக்குடன் அவற்றை துாய்மை செய்ய வேண்டும்.
இதற்கான உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் செயல்படுத்த வேண்டும்.
சுகாதாரமற்ற நீரை பருவதால் பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்று தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
எனவே இது குறித்த விழிப்புணர்வை ஊராட்சி நிர்வாகங்கள் உரிய முறையில் செயல்படுத் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.