/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துாய்மையே சேவை திட்டம்; ஊராட்சிகளில் பணி தீவிரம்
/
துாய்மையே சேவை திட்டம்; ஊராட்சிகளில் பணி தீவிரம்
ADDED : செப் 20, 2024 06:58 AM
திருவாடானை: திருவாடானை ஊராட்சிகளில் துாய்மையே சேவை திட்டத்தில் சுகாதாரம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் செப்.17 முதல் அக்.2 வரை துாய்மையே சேவை திட்டம் சார்பில் சுகாதாரம் தொடர்பான பணிகள் மேற் கொள்ளப் படுகின்றன.
திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் கூறியதாவது:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஊராட்சிப் பகுதிகளில் குப்பை அகற்றுதல், முக்கிய இடங்களில் மரக்கன்று நடுதல், சுகாதாரப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் சுத்தம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
துாய்மையே சேவை திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
மேலும் மாணவர்களை மரம் வளர்க்க ஊக்குவித்தல் மற்றும் மாணவர் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படுகிறது.
இறுதியில் ஊராட்சிப் பகுதியை துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என அக்.2 ல் கிராம சபை கூட்டத்தில் உறுதிமொழி எடுக்கப்படும் என்றார்.