/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பூட்டியே வைக்கப்பட்டுள்ள மீன் விற்பனை கட்டடங்கள் அரசு நிதி வீணடிப்பு
/
பூட்டியே வைக்கப்பட்டுள்ள மீன் விற்பனை கட்டடங்கள் அரசு நிதி வீணடிப்பு
பூட்டியே வைக்கப்பட்டுள்ள மீன் விற்பனை கட்டடங்கள் அரசு நிதி வீணடிப்பு
பூட்டியே வைக்கப்பட்டுள்ள மீன் விற்பனை கட்டடங்கள் அரசு நிதி வீணடிப்பு
ADDED : ஆக 04, 2025 04:01 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி கிழக்கு ரத வீதியில் 2018ல் கட்டப்பட்ட 10 கடைகள் கொண்ட மீன் மார்க்கெட் கட்டடம், 2021ல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள மீன்பிடித் தொழில் சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டத்தின் சார்பில் கட்டப்பட்ட விற்பனை குழு மையம் ஆகியவை ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 10 கடைகள் கட்டப்பட்ட நிலையிலும் அதன் அருகே அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மீன் விற்பனை மைய கட்டடம் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டடம் எவ்வித பயன்பாடின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளதால் குப்பை சேரும் இடமாகவும், சமூக விரோத செயல்கள் அரங்கேறும் இடமாகவும் மாறி வருகிறது.
திருப்புல்லாணி அருகே அத்தியட்சபுரம் மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகி நாகராஜன் கூறியதாவது:
திருப்புல்லாணி கிழக்கு ரத வீதியில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மைய கட்டடம் மற்றும் 10 கடைகள் பயன்பாடின்றி உள்ளன.
இதனை உரிய முறையில் டெண்டர் விட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். அப்பகுதியில் இருக்கக்கூடிய மீன் வியாபாரிகளுக்கு கடைகளும் கிடைக்கும்.
தற்போது மின் வியாபாரிகள் வெயிலிலும் மழையிலும் தற்காலிக செட் அமைத்து அவற்றில் விற்பனை செய்து வருகின்றனர்.
எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க இக்கட்டடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
மீன்வளத் துறை உயர் அதிகாரிகள் கட்டடத்தை ஆய்வு செய்து டெண்டர் விடும் பணியை செய்ய வேண்டும்.
இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுவதுடன் சுகாதாரமான முறையில் அமைக்கப்பட்ட கட்டடத்திற்கும் வழி கிடைக்கும்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன் என்றார்.