/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் அரசு இ--சேவை மையம் மூடல்
/
ராமேஸ்வரத்தில் அரசு இ--சேவை மையம் மூடல்
ADDED : நவ 13, 2024 10:05 PM

ராமேஸ்வரம், ; ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையம் மூடிக் கிடப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரத்தில் தாலுகா அலுவலகத்தின் மாடியில் அரசு இ-சேவை மையம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான மக்கள் ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட சான்றுகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறுகின்றனர்.
மேலும் ராமேஸ்வரத்தில் 5 தனியார் இ-சேவை மையங்கள் செயல்பட்டாலும் பெரும்பாலானோர் அரசு இ-சேவை மையத்தை தேடிச் செல்கின்றனர். இதனால் அரசு இ-சேவை மையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த 20 நாட்களாக இந்த இ-சேவை மையம் மூடிக் கிடக்கிறது.
இதனால் சான்றுகள் பெற முடியாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இங்கு பணிபுரிந்த ஊழியர் சிகிச்சைக்காக விடுப்பில் சென்றதால் இ-சேவை மையம் மூடிக் கிடப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

