/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவு சங்க அலுவலக உதவியாளர் தேர்வு: பட்டியல் வெளியீட்டில் முறைகேடு புகார்: இணைப்பதிவாளர் மறுப்பு
/
கூட்டுறவு சங்க அலுவலக உதவியாளர் தேர்வு: பட்டியல் வெளியீட்டில் முறைகேடு புகார்: இணைப்பதிவாளர் மறுப்பு
கூட்டுறவு சங்க அலுவலக உதவியாளர் தேர்வு: பட்டியல் வெளியீட்டில் முறைகேடு புகார்: இணைப்பதிவாளர் மறுப்பு
கூட்டுறவு சங்க அலுவலக உதவியாளர் தேர்வு: பட்டியல் வெளியீட்டில் முறைகேடு புகார்: இணைப்பதிவாளர் மறுப்பு
ADDED : ஜன 22, 2024 11:29 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை ஆள் சேர்ப்பு மையம் நடத்திய கூட்டுறவு சங்க உதவியாளர் தேர்வில் ரூ.பல லட்சம் பெற்றுக்கொண்டு தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டு முறைகேடு நடந்ததாக தேர்வு எழுதியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியான 112 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு டிச.,24ல் எழுத்து தேர்வு நடந்தது. தேர்ச்சிப்பட்டியல் 1:2 என்ற விகிதம் அடிப்படையில் வெளியிடப்பட்டு ஜன.,19ல் 230 பேர் நேர்முகத்தேர்வில் பங்கேற்றனர். இதற்கிடையில் தேர்ச்சி பட்டியல் வெளியீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வு எழுதியவர்கள் குற்றம் சாட்டினர்.
பரமக்குடி அருகே கமுதக்குடி ஏ.கருணாகரன் கூறியதாவது: என் இரு மகள்கள் தேர்வு எழுதினர். எழுத்துத்தேர்வு நியாயமாக நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, அதன் முடிவு விபரம் பென்டிரைவ்களில் பதிவு செய்துள்ளனர்.
அதில் ஒன்று மத்திய வங்கியில் சீலிடப்பட்டு பாதுகாப்பாகவும், மற்றொரு பென்டிரைவ் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (துணை பதிவாளர்) வசம் ஒப்படைக்கப்பட்டது.
அதிலுள்ள விபரங்களை வெளியிடாமல் தனியாக 'பென்டிரைவ்' தயார் செய்து வெளியிட்டுள்ளனர். இதில் ரூ.பல லட்சம் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் வேண்டியவர்களின் பெயரை முறைகேடாக பட்டியலில் சேர்த்து வெளியிட்டுள்ளனர்.
சீலிடப்பட்டுள்ள பென்டிரைவை எடுத்து விடைத்தாளுடன் ஒப்பிட்டால் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்து விடும். இப்பிரச்னை காரணமாக இணைப்பதிவாளர் முத்துக்குமார் நீண்ட விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, என்றார்.
ராமநாதபுரம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் (பொறுப்பு) மனோகரன் கூறியதாவது:
தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. 112 பேரை தேர்வு செய்ய நேர்முகத்தேர்வு நடந்துள்ளது. இங்குள்ள அதிகாரிகள் தலையீடு இல்லாமல் சென்னை ஏஜென்சியிடம் கொடுத்து தேர்வுத்தாள் திருத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆதாரமின்றி பொய்யான குற்றச்சாட்டை பரப்புகின்றனர் என்றார்.

