/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவுத்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்
/
கூட்டுறவுத்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 08, 2024 12:47 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் முதுநிலை ஆய்வாளர்களுக்கான மண்டல மாறுதல் ஆணையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகவளாகத்தில் உள்ள மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்குமாவட்ட துணைத் தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் விஜயராமலிங்கம், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சர்வாதிகாரப் போக்கை கண்டிக்கிறோம். இளநிலை ஆய்வாளரில் இருந்து முதுநிலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. பணிபுரியும் இடத்தில் இல்லாமல் மண்டல மாறுதல் ஆணையை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். ராமநாதபுரம் வட்டார செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

