/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி கடலில் ரோந்து பணி தீவிரம்
/
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி கடலில் ரோந்து பணி தீவிரம்
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி கடலில் ரோந்து பணி தீவிரம்
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி கடலில் ரோந்து பணி தீவிரம்
ADDED : ஏப் 25, 2025 06:23 AM
திருவாடானை: காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கடலில் தேவிபட்டினம்,தொண்டி மரைன் போலீசார் கூட்டுரோந்து பணியில் ஈடுபட்டனர்.  ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாதலத்தில் ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளி நாட்டவர் இருவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக தமிழகமெங்கும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேவிபட்டினம் மற்றும் தொண்டி மரைன் போலீசார் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடலில் படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொண்டி, திருப்பாலைக்குடி, நம்புதாளை, எஸ்.பி.பட்டினம்போன்ற பகுதிகளில் பஸ்ஸ்டாண்ட், மக்கள் கூடும் இடங்கள், செக்போஸ்ட்டுகளில் வாகன சோதனை நடந்தது.