/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெப்பம் குறைய தென்னை ஓலை ஆட்டோ டிரைவர்களின் முயற்சி
/
வெப்பம் குறைய தென்னை ஓலை ஆட்டோ டிரைவர்களின் முயற்சி
வெப்பம் குறைய தென்னை ஓலை ஆட்டோ டிரைவர்களின் முயற்சி
வெப்பம் குறைய தென்னை ஓலை ஆட்டோ டிரைவர்களின் முயற்சி
ADDED : மே 14, 2025 12:41 AM

திருவாடானை திருவாடானை, தொண்ட உள்ளிட்ட இடங்களில் வெயில் உக்கிரம் அதிகமாக உள்ளது. காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை கடும் வெப்பமாக உள்ளது.
இந்நிலையில் ஆட்டோவில் செல்லும் பயணிகளின் நலனுக்காக கூரையின் மேல் தென்னை ஓலை கட்டி வைத்துள்ளனர். இதன் மூலம் வெப்பம் குறைவதால் பயணிகள் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.
திருவாடானை ஆட்டோ டிரைவர் தாஸ் கூறியதாவது: தென்னை ஓலைகள் சூரிய ஒளியை பிரதிபலித்து ஆட்டோவுக்குள் வெப்பநிலை உயர்வதைத் தடுக்கிறது. அவை ஆட்டோவுக்குள் அதிக வெப்பம் ஈர்ப்பதைத் தடுக்கின்றன.
தென்னை ஓலை மலிவாக கிடைப்பதால் பயனுள்ளதாக உள்ளது. நீண்ட துாரம் செல்லும் பயணிகள் வெயிலால் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக ஆட்டோ மீது தென்னை ஓலை கட்டி வைத்துள்ளோம் என்றார்.