/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேங்காய் விலை உயர்ந்தும் விவசாயிகளுக்கு பலனில்லை
/
தேங்காய் விலை உயர்ந்தும் விவசாயிகளுக்கு பலனில்லை
ADDED : ஜன 15, 2025 12:28 AM
ராமநாதபுரம்; தமிழகத்தில் தேங்காய் விலை உயர்ந்தாலும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
கேரளாவுக்கு அடுத்தபடியாக தேங்காய் உற்பத்தியில் தமிழகம் உள்ளது. கடற்கரையோர மாவட்டங்களில் தேங்காய் உற்பத்தி அதிகளவில் இருக்கும். உள் மாவட்டங்களான தேனி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேங்காய் உற்பத்தி அதிகளவில் இருக்கும்.
தற்போது தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதலால் பெருமளவில் விளைச்சல் குறைந்து விட்டது.மரத்தில் பாளை விடும் போது அதில் உள்ளவற்றை இந்த ஈக்கள் உறிஞ்சி விடுவதால் மூன்றில் ஒரு பங்கு தான் விளைச்சல் கிடைக்கிறது.
இதன் காரணமாக மார்க்கெட்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் ஒரு காய்க்கு ரூ.15 வரை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். தேங்காய் விலை உயர்ந்திருந்தாலும் விளைச்சல் குறைவால் பயனில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
மணிமாதவன், தென்னை விவசாயி: தற்போது தேங்காய் சில்லரை விலையில் ரூ.20க்கு குறைந்து வாங்க முடியாது. ஆனால் விவசாயிகளுக்கு பலனில்லை. 50 நாட்களுக்கு ஒரு முறை காய் வெட்டும் போது 25 முதல் 30 ஆயிரம் காய் வரை காய்க்கும். தற்போது ஒரு வெட்டுக்கு 12 ஆயிரம் காய்கள் தான் கிடைக்கிறது. விளைச்சலாகியுள்ளது. விளைச்சல் குறைவால் விலை உயர்ந்தும் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கவில்லை என்றார்.