ADDED : ஏப் 03, 2026 07:19 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடியில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஓட்டு சேகரித்த வேட்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்த நிலையில், இச்செயல் தொடர்ந்ததால் மக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.
பரமக்குடி (தனி) தொகுதியில் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் உள்ளனர். முத்தாலம்மன் கோயில் பங்குனி விழா நடக்கும் நிலையில் தேரோட்ட நிகழ்வுகள் உட்பட பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் ஓட்டு சேகரித்தனர். இதையடுத்து வேட்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
நேற்று காலை துவங்கி பல ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது வைகை ஆறு உட்பட பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் போட்டி போட்டு ஓட்டு சேகரிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தனர்.
