/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வங்கிகள் மக்களுக்கு கடன் தொகையை தாமதமின்றி வழங்க கலெக்டர் உத்தரவு
/
வங்கிகள் மக்களுக்கு கடன் தொகையை தாமதமின்றி வழங்க கலெக்டர் உத்தரவு
வங்கிகள் மக்களுக்கு கடன் தொகையை தாமதமின்றி வழங்க கலெக்டர் உத்தரவு
வங்கிகள் மக்களுக்கு கடன் தொகையை தாமதமின்றி வழங்க கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூன் 26, 2025 01:01 AM
ராமநாதபுரம்: மாவட்டத்திலுள்ள வங்கிகள் பெறக்கூடிய மனுக்களை பரிசீலனை செய்து மக்களுக்கு கடன் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்துகூறியதாவது:
அரசின் மானிய திட்டங்கள் வங்கிகள்மூலம் பொது மக்களுக்கு சென்றடைகின்றன. குறிப்பாக மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை போன்ற துறைகள் மூலம் பொதுமக்களுக்கான கடன் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய கடன் தொகை வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.
எனவே வங்கிகள் பெறக்கூடிய மனுக்களை பரிசீலனை செய்து மக்களுக்கு கடன் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என்றார்.
முன்னதாக ரிசர்வ் வங்கி மூலம் மேற்கொள்ளப்படும் சமீபகால நடவடிக்கைகள் மற்றும் வங்கிகளின் செயல்பாடுகள் தொடர்பாகவும், நபார்டு தொடர்பான திட்டங்கள் பற்றியும் வங்கி அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், ரிசர்வ் வங்கி ராமநாதபுரம் (பொறுப்பு) அலுவலர் அன்பரசு, மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) அருண்குமார், அரசு அலுவலர்கள்,வங்கியாளர்கள் பங்கேற்றனர்.