/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அக்.2ல் கிராமசபை கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவு
/
அக்.2ல் கிராமசபை கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 29, 2024 07:23 AM
ராமநாதபுரம் : அக்.2ல் காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
அக்.2ல் காந்தி ஜெயந்தி அன்று காலை 11:00 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.
இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சி தணிக்கை அறிக்கை (2023--24), துாய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்க வேண்டும்.
பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை பதிவு செய்யலாம் என்றார்.