/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நவ.1ல் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மக்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்

ADDED : அக் 30, 2025 03:44 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி களிலும் கிராம சபை கூட்டம் நவ.,1ல் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின் படி ஒவ்வொரு ஆண்டும் நவ.,1ல் உள்ளாட்சிகள் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த வேண்டும். அதன்படி நாளை மறுநாள் (நவ.,1)காலை 11:00 மணிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும்.
இக் கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தி கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், துாய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம்.
இதர பொருட்கள் குறித்து கிராம சபையில் விவாதிக்க வேண்டும்.
எனவே பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.