/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாலையில் திரியும் கால்நடைகள் உரிமையாளர்களுக்கு அபராதம் கலெக்டர் எச்சரிக்கை
/
சாலையில் திரியும் கால்நடைகள் உரிமையாளர்களுக்கு அபராதம் கலெக்டர் எச்சரிக்கை
சாலையில் திரியும் கால்நடைகள் உரிமையாளர்களுக்கு அபராதம் கலெக்டர் எச்சரிக்கை
சாலையில் திரியும் கால்நடைகள் உரிமையாளர்களுக்கு அபராதம் கலெக்டர் எச்சரிக்கை
ADDED : டிச 09, 2024 05:09 AM
ராமநாதபுரம்: மாவட்டத்தில் சாலைகள், தெருக்களில் உணவு தேடும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் அபராதம், தண்டனை வழங்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், பிராணிகள் வதை தடுப்புச் சங்கம், செயல்பாடுகள், சட்டத்திற்கு புறம்பாக கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லுதல், இறைச்சிக் கூடங்களில் கால்நடை அறுவை சம்பந்தமாக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தலைமை வகித்து கலெக்டர் கூறியதாவது: கால்நடைகள், செல்லப்பிராணிகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை கண்காணிக்கவும் கால்நடை நலனை மேம்படுத்தவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிராணிகள் துயர் துடைப்பு சங்கம் செயல்படுகிறது. மினி லோடு வேனில் 2 மாடுகள் அல்லது 10 ஆடுகளை அழைத்து செல்லலாம். பெரிய லாரியில் 6 மாடுகள் அல்லது 40 ஆடுகள் அழைத்து செல்லலாம். இறைச்சி அறுவைக் கூடங்களில் கால்நடை மருத்துவச் சான்று பெற்ற கால்நடைகளை மட்டுமே வதை செய்ய வேண்டும். பொது இடங்களில் கால்நடைகள் வதை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
உணவிற்காக பாலுாட்டும் கால்நடைகள், பால்குடி மறவாத குட்டி, நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை வதை செய்யப்படக் கூடாது. தெருக்களில் மற்றும் சாலைகளில் கால்நடைகள் உணவு தேட காரணமாக உள்ள கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் அல்லது தண்டனை விதிக்க பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.