/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலரில் 'ெஹல்மெட்' அணிந்து வந்தவர்களுக்கு கலெக்டர் பரிசு
/
டூவீலரில் 'ெஹல்மெட்' அணிந்து வந்தவர்களுக்கு கலெக்டர் பரிசு
டூவீலரில் 'ெஹல்மெட்' அணிந்து வந்தவர்களுக்கு கலெக்டர் பரிசு
டூவீலரில் 'ெஹல்மெட்' அணிந்து வந்தவர்களுக்கு கலெக்டர் பரிசு
ADDED : ஜன 29, 2025 07:44 AM

ராமநாதபுரம் :   தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி டூவீலரில் 'ெஹல்மெட்' அணிந்து வந்தவர்களை பாராட்டி கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்  ஊக்கப்பரிசு வழங்கினார்.
ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில்  டூவீலரில்  விழிப்புணர்வு  ஊர்வலத்தை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்  துவக்கி வைத்தார்.  அப்போது ரோட்டில்  டூவீலரில் 'ெஹல்மெட்'  அணிந்து சென்ற வாகன ஓட்டிகளை  பாராட்டி கலெக்டர்  ஊக்கப் பரிசு வழங்கினார்.
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள்  டூவீலரில் 'ெஹல்மெட்'  அணிந்து  நகரின் முக்கிய வீதிகள் வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலமாக வந்தனர். இதில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் விபத்தில்லா பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு விதிகளை  தெரிந்து கொள்ளும் வகையில் அரசு பஸ்சில் வடிவமைக்கப்பட்ட கண்காட்சி வாகனத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் கந்தசாமி, துணை மேலாளர் தமிழ்மாறன், கிளை மேலாளர்கள் பாலமுருகன், ரவி, தேவேந்திரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

