ADDED : மார் 15, 2026 04:45 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் 7 வது ஆண்டு விழா கொண் டாடப்பட்டது.
தாளாளர் வேலு மனோகரன் தலைமை வகித்தார். முதல்வர் ரஜினி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். சிறப்பு விருந்தினர் தமிழ்ப் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசுகையில், மாணவிகள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கற்பது அவசியம். பெண்கள் தைரியத்தின் அடையாளமாக விளங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
டாக்டர்கள் பரணிக்குமார், வித்யா பிரிய தர்ஷினி, துணைத் தாளாளர் பார்த்தசாரதி, செயலாளர் சகுந்தலா, வேலு மாணிக்கம் கல்வி அறக்கட்டளை உறுப் பினர்கள் பங்கேற்றனர்.
