ADDED : ஏப் 06, 2026 05:32 PM

அ நிறம் | அளவு
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லுாரியில் 21வது ஆண்டு விழா நடந்தது. முதல்வர் சூசைநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். தாளாளர் கஷ்மீர் சகாயநாதன் தலைமை வகித்தார். தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட் மோசஸ், ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் யுனைசி, கவுசானல் கல்வி குழுமத்தின் முதன்மையர் ஸ்டீபன் ஆரோக்கியசாமி, ஏஞ்சலோ சுப்பீரியர் ஸ்டீபன் சவரி ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாணவர்களின் பரதநாட்டியம், குழு நடனம், நாடகம் நடந்தது. விளையாட்டு, கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. அலுவலக செயலாளர் சத்யா நன்றி கூறினார்.
--
