தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கல்லுாரி ஆண்டு விழா

 கல்லுாரி ஆண்டு விழா

 கல்லுாரி ஆண்டு விழா


ADDED : ஏப் 10, 2026 04:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 04:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. முகம்மது சதக் அறக்கட்டளை இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா தலைமை வகித்தார். துணை முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். முதல்வர் நிர்மல் கண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் பங்கேற்று மாணவர்களிடம் தன்னம்பிக்கை சொற்பொழிவாற்றினார்.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. 100 சதவீதம் தேர்ச்சி பெற செய்த பேராசிரியர்களுக்கு பரிசுத் தொகை நினைவுக் கோப்பை வழங்கப்பட்டது.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சண்முகப்பிரியா, உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் குமார், பி.ஆர்.ஓ.,நஜ்முதீன் செய்திருந்தனர். கல்லுாரி திட்டமிடல் அலுவலர் திராவிட செல்வி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us