/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடியில் கல்லுாரி மாணவிகள் உழவாரப்பணி
/
தனுஷ்கோடியில் கல்லுாரி மாணவிகள் உழவாரப்பணி
ADDED : ஜன 25, 2025 07:01 AM

ராமேஸ்வரம் :  தனுஷ்கோடி கடற்கரையில் பாம்பன் அன்னை கொலாஸ்டிகா கல்லுாரி மாணவிகள் உழவாரப்பணி செய்தனர்.
பாம்பன் அன்னை கொலஸ்டிகா கல்லூரி என்.எஸ்.எஸ்., திட்ட மாணவிகள் மற்றும் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் அறக்கட்டளை இணைந்து தனுஷ்கோடி கம்பிபாடு, அரிச்சல்முனை கடற்கரையில் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். இதில் மீனவர்கள் கடலில் வீசிய பேய் வலைகள், பிளாஸ்டிக் கழிவுகள், பாலிதீன் பைகள் உள்ளிட்ட ஏராளமான கழிவு பொருட்களை மாணவிகள் சேகரித்தனர்.
மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை மண்டல அலுவலர் கவுசிகா, துணை மண்டல அலுவலர் கோவிந்தராஜ், கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் மங்களேஸ்வரி, தங்கச்சிமடம் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் ஜான்போஸ் உட்பட ஏராளமான கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர்.

