ADDED : செப் 08, 2026 10:07 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: -முதுகுளத்துார் காந்தி சிலை அருகில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மூக்கையாத்தேவர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் சண்முகபாண்டியன் தலைமை வகித்தார்.
பொருளாளர் முத்துராமலிங்கம், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட துணைச் செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.
அப்போது மூக்கையாத்தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செய்தனர்.
உடன் மாவட்ட துணைத் தலைவர் வெங்கடாசலம் சுப்பிரமணியன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
