/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
100 சதவீதம் எஸ்.ஐ.ஆர்., பணியை முடித்த அலுவலர்களுக்கு பாராட்டு
/
100 சதவீதம் எஸ்.ஐ.ஆர்., பணியை முடித்த அலுவலர்களுக்கு பாராட்டு
100 சதவீதம் எஸ்.ஐ.ஆர்., பணியை முடித்த அலுவலர்களுக்கு பாராட்டு
100 சதவீதம் எஸ்.ஐ.ஆர்., பணியை முடித்த அலுவலர்களுக்கு பாராட்டு
ADDED : டிச 04, 2025 05:38 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகாவில் 100 சதவீதம் எஸ்.ஐ.ஆர்., பணியை முடித்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டினார்.
முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் படிவம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி திரும்ப பெறும் பணி குறித்து நேரில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.
பின் முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது:
மக்களுக்கு நேரடியாக வீட்டிற்கு சென்று படிவங்கள் வழங்க வேண்டும். பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அலுவலரிடம் தெரிந்து வாக்காளர்கள் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். வழங்கப்பட்டுள்ள படிவங்களை உரிய காலத்திற்குள் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றார்.
100 சதவீதம் பணியை முடித்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் ஜான்மில்டன், ஆர்.ஐ., கார்த்திகா ஆகியோருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், தாசில்தார் கோகுல்நாத் பங்கேற்றனர்.

