UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 04:52 PM

அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டியில் நபிகள் நாயகம் எல்லோருக்கும் சொந்தமானவர் என்ற தலைப்பில் மத நல்லிணக்க கூட்டம் நடந்தது. தொண்டி பெரிய பள்ளிவாசல் நகர உலமா சபை தலைவர் செய்யது முகமது காசிம் தலைமை வகித்தார். திருவாடானை ஜெயவீர காளியம்மன் கோயில் பரம்பரை பூஜாரி உதயநாராயண குமார், தொண்டி பாதிரியார் லியாகுல அமிர்தராஜ் மற்றும் அனைத்து மதத்தினரும், முக்கியதஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
நபிகள் நாயகம் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் உரியவர் அல்லர். அவர் மனித குலத்திற்கு பொதுவான அமைதியையும், அன்பையும், சகோரதத்துவத்தையும் போதித்தவர். ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து அனைத்து மக்களும், அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ வேண்டியதன் அவசியத்தை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசினர்.
