ADDED : பிப் 14, 2026 05:46 AM

அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், வட்டாரத்திற்கு உட்பட்ட கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திரா காந்தி தலைமையில் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் முனீஸ்வரி கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து மரியாதை செய்தார்.
தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன. பின்னர், கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய சத்தான உணவுகள் குறித்தும், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், அலுவலர்கள் கர்ப்பிணிகளுக்கு எடுத்துரைத்தனர். அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
