/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆபத்தான நிலையில் சமுதாய கட்டடம்
/
ஆபத்தான நிலையில் சமுதாய கட்டடம்
ADDED : ஆக 18, 2025 11:25 PM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே மேலமானாங்கரை கிராமத்தில் சமுதாய கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் அருகே மேலமானாங்கரை கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்களின் நலன் கருதி விசேஷங்கள் அரசு விழாக்கள் நடத்துவதற்காக சமுதாய கட்டடம் கட்டப்பட்டது.
பின்பு முறையாக பராமரிப்பு பணி செய்யப்படாததால் தற்போது கட்டடம் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனால் கிராமத்தில் சமுதாய கட்டடம் இருந்தும் பயன்பாடின்றி இருப்பதால் கிராம மக்கள் வேறு வழியின்றி இல்ல விசேஷங்களை 5 கி.மீ.,ல் உள்ள முதுகுளத்துாரில் பணம் செலவு செய்து வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் இருப்பதால் கட்டடம் அருகில் செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே சமுதாய கட்டடத்தை பராமரிப்பு பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.