/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அழகப்பா பல்கலை பளுதுாக்கும் போட்டி; பரமக்குடி கல்லுாரி முதலிடம்
/
அழகப்பா பல்கலை பளுதுாக்கும் போட்டி; பரமக்குடி கல்லுாரி முதலிடம்
அழகப்பா பல்கலை பளுதுாக்கும் போட்டி; பரமக்குடி கல்லுாரி முதலிடம்
அழகப்பா பல்கலை பளுதுாக்கும் போட்டி; பரமக்குடி கல்லுாரி முதலிடம்
ADDED : செப் 20, 2024 07:01 AM

பரமக்குடி : பரமக்குடி அரசு கலைக்கல்லுாரியில் அழகப்பா பல்கலை இடையிலான பளு துாக்கும் போட்டிகள் நடந்தன. இதில் ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் பரமக்குடி அரசு கல்லுாரி முதலிடம் பெற்றது.
இதன்படி 2024-25ம் கல்வி ஆண்டிற்கான போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 8 கல்லுாரிகளும், பெண்கள் பிரிவில் 4 கல்லுாரிகளும் கலந்து கொண்டன.
போட்டிகளை பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி பொறுப்பு முதல்வர் அறிவழகன் துவக்கி வைத்தார். அழகப்பா பல்கலை துணை உடற்கல்வி இயக்குனர் மணியழகு கலந்து கொண்டார். போட்டிகள் சினாட்ஸ் மற்றும் கிளீன் அண்டு ஜெர்க் முறையில் நடந்தது.
ஆண்கள் பிரிவில் 51, 61, 67, 73, 81, 89, 96, 102 ஆகிய உடல் எடை பிரிவுகளில் ரிஷிகேசன், சூரிய நாராயணன், அமர்ஜித், நவீன் குமார், ராமச்சந்திரன், கிருபாகரன், தர்வின் விக்னேஷ், சரவணன் முதலிடம் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் 45, 49, 55, 59, 64, 71 கிலோ உடல் எடை பிரிவில் ரூபினி, தேஜா, கீர்ஜனா பாரதி, ஸ்ரீ தேவி, கோபிகா, சக்தி முதலிடம் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் 112 புள்ளிகளும், ஆண்கள் பிரிவில் 234 புள்ளிகளை பெற்று பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.
ஏற்பாடுகளை பரமக்குடி உடற்கல்வி இயக்குனர் பிரசாத் செய்திருந்தார். நடுவர்களாக தேசிய நடுவர் ரவிவர்மா, ராமநாதபுரம் சங்க செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.