/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரெகுநாதபுரத்தில் ஹலோ போலீஸ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை புகார் அளிப்பவர்கள் அச்சம்

ADDED : செப் 24, 2024 04:24 AM
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் நகர் பகுதியில் போதிய எண்ணிக்கையில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இங்கு கடந்த 2022ல் கட்டப்பட்ட புறக்காவல் நிலையம் பெயரளவிற்கு மட்டுமே செயல்படுகிறது. திருப்புல்லாணி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 12 கி.மீ.,ல் ரெகுநாதபுரம் அமைந்துள்ளது. ரெகுநாதபுரத்தை சுற்றிலும் 25க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அமைந்துள்ளன.
கிராமங்களில் ஆள் நடமட்டமில்லாத இடங்களை தேர்வு செய்யும் வழிப்பறி கொள்ளையர்கள் நகை கொள்ளை, வாகனங்களில் ஆடுகளை திருடி செல்கின்றனர்.
இரு நாட்களுக்கு முன் மதியம் 3:00 மணிக்கு மது போதையில் இளைஞர்கள் டூவீலரில் அதிவேகமாக ரெகுநாதபுரம் நகரில் உலா வந்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் இப்படி வேகமாக சென்றால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை இளைஞர்கள் பீர்பாட்டிலை உடைத்து அப்பகுதி மக்களை அச்சுறுத்தினர். அச்சமடைந்த அப்பகுதி மக்கள் ஹலோ போலீசுக்கு தெரிவித்தனர்.
நீண்ட நேரம் ஆகியும் ஹலோ போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
எனவே எஸ்.பி., சந்தீஸ் கிராமங்களில் டூவீலர்களில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்வோரையும், கஞ்சா மற்றும் மது போதையில் பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.