/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொலை வழக்கில் எஸ்.ஐ.,க்கு லஞ்சம் கொடுத்ததாக புகார்
/
கொலை வழக்கில் எஸ்.ஐ.,க்கு லஞ்சம் கொடுத்ததாக புகார்
கொலை வழக்கில் எஸ்.ஐ.,க்கு லஞ்சம் கொடுத்ததாக புகார்
கொலை வழக்கில் எஸ்.ஐ.,க்கு லஞ்சம் கொடுத்ததாக புகார்
ADDED : அக் 21, 2024 12:49 AM
தொண்டி : கொலை வழக்கில் சிலரை கைது செய்யக் கோரி எஸ்.ஐ.,க்கு லஞ்சம் கொடுத்ததாக தொண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தொண்டி அருகே நம்புதாளை மேற்கு தெருவை சேர்ந்தவர் முகமது அபுபக்கர் 26. அதே தெருவை சேர்ந்தவர் மிர்சான் அலி 38. இருவரும் நண்பர்கள். மிர்சான் அலி மனைவிக்கும், முகமது அபுபக்கருக்கும் தொடர்பு ஏற்பட்டது.
இதையறிந்த மிர்சான் அலி ஜூன் 30 இரவு ஆட்டுக்கல்லை துாக்கி தலையில் போட்டு முகமது அபுபக்கரை கொலை செய்தார். தொண்டி போலீசார் மிர்சான் அலியை கைது செய்தனர். கொலையில் சிலர் உடந்தையாக இருக்கலாம் என்று முகமது அபுபக்கர் உறவினர்கள் கருதினர்.
முகமது அபுபக்கர் சகோதரர் முகமது இஸ்மாயில் தொண்டி போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். அதில் தொண்டி எஸ்.ஐ., விஷ்ணுமணி என்னிடம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறேன் என்று கூறி ரூ.20 ஆயிரம் கேட்டார்.
இதையடுத்து ரூ.14 ஆயிரத்தை ரொக்கமாகவும், மீதி ரூ.6000த்தை ஆன்-லைன் ஆப் மூலம் அவருக்கு அனுப்பினேன். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை. இது குறித்து அவரிடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கேட்ட போது என்னை தாக்கினார் என குறிப்பிட்டுள்ளார். புகார் குறித்து தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து எஸ்.ஐ., விஷ்ணு மணி கூறுகையில் இந்த வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி. இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் தான் விசாரிக்க வேண்டும். அவர்களிடம் எந்த பணமும் நான் கேட்கவில்லை. பணத்தை வேண்டும் என்றே எனக்கு தெரியாமல் எனது அலைபேசி எண்ணில் போட்டுள்ளனர். இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

