/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதைப்பொருட்கள் விற்பனை குறித்து அலைபேசி செயலி மூலம் புகார் தரலாம்
/
போதைப்பொருட்கள் விற்பனை குறித்து அலைபேசி செயலி மூலம் புகார் தரலாம்
போதைப்பொருட்கள் விற்பனை குறித்து அலைபேசி செயலி மூலம் புகார் தரலாம்
போதைப்பொருட்கள் விற்பனை குறித்து அலைபேசி செயலி மூலம் புகார் தரலாம்
ADDED : பிப் 19, 2025 04:46 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து 'போதை இல்லா தமிழ்நாடு' என்ற அலைபேசி செயலி வழியாக மக்கள் புகார் தெரிவிக்கலாம்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், 'போதை இல்லா தமிழ்நாடு' தொடர்பான விழிப்புணர்வு அலைபேசி செயலியின் பயன்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து கூறியதாவது: மாவட்டத்தில் போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்த புகார்களை மாணவர்கள், பொதுமக்கள் தெரிவிக்கும் பொருட்டு போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு (Drug Free Tamilnadu) என்ற அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இச்செயலி மூலம் பெறப்படும் புகார்கள் மாவட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி.,க்கும் http://admin.drugfree-tn.com என்ற இணையதளத்திலும் கலெக்டருக்கும் புகார் அளிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவித்தவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
மேலும் புகார்களை கட்டமில்லாத தொலைபேசி எண் 10581 மற்றும் 91-94984 10581 அலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
கலால் உதவி ஆணையர் சாந்தி, மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) அய்யப்பன், கோட்ட ஆய அலுவலர் முருகேசன், கல்லுாரி முதல்வர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

