/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

ADDED : செப் 06, 2025 02:56 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாத்திரை பணியாளர் சங்கத்தினர் புகார் செய்தனர்.
இதுகுறித்து ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி., மீராவிடம் கோயில் யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதில் புனித நீராட ஒரு நபருக்கு ரூ. 25ம், கோயிலில் சிறப்பு தரிசனம் செய்ய ரூ.100 மற்றும் 200 கட்டணத்தை கோயில் நிர்வாகம் வசூலிக்கிறது.
கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் அந்தந்த மாநில மொழிகளில் பேசி தீர்த்தம் எடுத்து ஊற்றி பாதுகாப்புடன் வழிநடத்தி யாத்திரை பணியாளர் சங்க உறுப்பினர்கள் சேவை செய்கின்றனர்.
ஆனால் கோயில் மரபையும், எங்களது பணியாளர்களின் சேவைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக வெளிநபர்கள் சிலர் புனித நீராடவும், கோயிலில் தரி சனத்திற்கும் கூடுதலாக பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பது தெரிகிறது.
இந்த ஏமாற்று ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித் துள்ளார்.