/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெட்ரோல் பங்குகளில் வாகன புகை பரிசோதனை மையம் கட்டாயப்படுத்தும் நடவடிக்கையால் சிக்கல்

ADDED : மே 15, 2025 02:55 AM
ராமநாதபுரம்:தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளில் புகை பரிசோதனை மையம் அமைக்க அரசு வலியுறுத்துவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் முடிவெடுக்க வேண்டியது பெட்ரோலிய நிறுவனங்கள் தான் என பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க வாகனங்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை புகை பரிசோதனை செய்யப்பட வேண்டும். சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு அது டூவீலராக இருந்தாலும் கூட ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால் அனைத்து வாகனங்களும் 6 மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்ய போதுமான வாகன புகை பரிசோதனை மையங்கள் இல்லை. எனவே அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் புகை பரிசோதனை மையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த உத்தரவை கட்டாயமாக அமல்படுத்துமாறு வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை அழைத்து புகை பரிசோதனை மையம் அமைக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
ஆனால், பெட்ரோலிய நிறுவனங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும், நாங்கள் இதில் எதுவும் செய்ய முடியாது என பங்க் உரிமையாளர்கள் கூறினர். இதையடுத்து தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து பெட்ரோலிய நிறுவனங்களுக்கு புகை பரிசோதனை மையம் அமைக்க கடிதம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.