/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கணினி அறிவியல் துறை கருத்தரங்கு
/
கணினி அறிவியல் துறை கருத்தரங்கு
ADDED : பிப் 03, 2026 06:34 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் கணினி அறிவியல் துறை மாணவியர் சங்கம் சார்பில் கருத்துப்பட்டறை நடந்தது. முதல்வர் மணிமாலா தலைமை வகித்தார்.
'நோ எஸ்கியுஎல் வித் மாங்கோடிபி' என்ற தலைப்பில் தரவுத்தளம் குறியீடுகள், அதனை பயன்படுத்துதல், அவற்றின் பயன்பாடுகள் குறித்த கருத்தரங்கு நடந்தது. மதுரை மீனாட்சி மகளிர் கல்லுாரி கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் சுதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கணினி துறைத்தலைவர் ஜாஸ்மின் குணசுந்தரி வரவேற்றார். ஐ.கியு.ஏ.சி., ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா வாழ்த்துரை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஏற்பாடு செய்திருந்தார்.
பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் மாணவிகள் 250 பேர் பங்கேற்றனர். பல்கலை தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும், அவர்தம் பெற்றோர்களுக்கு மரியாதையும் செய்யப்பட்டது. மாணவியர் சங்கத் தலைவி ருமானா நன்றி கூறினார்.-----

