தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கணினி அறிவியல் கருத்தரங்கு

கணினி அறிவியல் கருத்தரங்கு

கணினி அறிவியல் கருத்தரங்கு


ADDED : பிப் 07, 2025 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2025 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அரசு பெண்கள் கல்லுாரியில் கணினி அறிவியல் துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.

கணினி அறிவியல் துறை மாணவிகள் சங்கம் சார்பில் நடந்த மெஷின் லேர்னிங் டெக்னிக்ஸ் பார் தி இன்டர் நெட் ஆப் திங்ஸ்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லுாரி முதல்வர் மணிமாலா தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத்தலைவர் ஜாஸ்மின் குணசுந்தரி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக பரமக்குடி அரசு கலை அறிவியல் கல்லுாரியின் கணினி அறிவியல்துறை உதவிப் பேராசிரியர் கே.ராஜிவ் காந்தி பங்கேற்றார்.

கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணா வாழ்த்தினார். விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.சர்மிளா செய்திருந்தார். பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

பல்கலை தர வரிசைப்பட்டியலில் இடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசும், அவர்களின் பெற்றோருக்கு மரியாதையும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவியர் சங்கத்தலைவி ஆர்.ேஹமஸ்ரீ நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us