தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணிக்கு கணினி ஆசிரியர்கள் ஆதரவு 

 அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணிக்கு கணினி ஆசிரியர்கள் ஆதரவு 

 அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணிக்கு கணினி ஆசிரியர்கள் ஆதரவு 


ADDED : ஏப் 21, 2026 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 02:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணிக்கு 60,000 கணினி அறிவியல் ஆசிரியர்கள் ஆதரவளிக்கிறோம், என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் குமரேசன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மத்திய அரசு நிதி வழங்கியும் அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் கற்பிக்காமல் தி.மு.க., அரசு வஞ்சிக்கிறது.மத்திய அரசுக்கு வெற்றுக் கணக்கை காண்பிக்க கணினி அறிவியல் பாடத்தை வெறும் 3 பக்கங்களுக்கு மட்டும் அறிவியல் பாடத்தோடு சேர்த்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களை ஏமாற்றுகின்றனர். தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தில் படித்து பி.எட்., முடித்துள்ள 60,000 பேர் இருக்கும்போது, 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி ஏமாற்றி விட்டனர்.

அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் 6வது தனி பாடாமாக கொண்டுவரப்படும் என்ற அ.தி.மு.க., பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம். இதற்கு முழு ஆதரவு தருகிறோம்.60,000 கணினி அறிவியல் ஆசிரியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிப்போம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us