/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீன்வளத்துறையினரைக் கண்டித்து ஜூன் 2 ல் சங்கு ஊதும் போராட்டம்
/
மீன்வளத்துறையினரைக் கண்டித்து ஜூன் 2 ல் சங்கு ஊதும் போராட்டம்
மீன்வளத்துறையினரைக் கண்டித்து ஜூன் 2 ல் சங்கு ஊதும் போராட்டம்
மீன்வளத்துறையினரைக் கண்டித்து ஜூன் 2 ல் சங்கு ஊதும் போராட்டம்
ADDED : மே 29, 2025 11:11 PM
ராமநாதபுரம்: மாதந்தோறும் நடைபெற வேண்டிய மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தை தற்போது 3 மாதங்களுக்கு ஒருமுறை என மாற்றியுள்ளதையும், தொடர்ந்து கோரிக்கைகளை கண்டுகொள்ளாத மீன்வளத்துறையை கண்டித்தும் ஜூன் 2ல் சங்கும் ஊதும் போராட்டம் நடத்த உள்ளதாக கடல்தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டகடல் தொழிலாளர் சங்கம் தலைவர் கணேசன், செயலாளர் கருணாமூர்த்தி கூறியதாவது:
தமிழக மீன்வளத்துறையானது மாதந்தோறும் நடத்த வேண்டிய மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை இனி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு மாதந்தோறும் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் முறையாக நடந்தது போன்றும், மீனவர்கள் குறைகள் எல்லாம் தீர்த்து வைக்கப்பட்டது என நினைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தினால் போதும் என முடிவு செய்துள்ளனர்.
மாதந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் ராமநாதபுரம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் நடத்துவது இல்லை. மீன்வளத்துறை அதிகாரிகள் முறையாக அமல்படுத்துவார்களா என்பது கேள்விக்குறிதான். மீனவர்கள் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் சரி, மனுக்கள் கொடுத்தாலும் சரி, அரசு நிர்வாகங்களின் காதுகளுக்கு மட்டும் அது கேட்காது.
விசைப்படகுகளின் இரட்டைமடி, நாட்டுப்படகு வல்லங்களின் சுருக்குமடி மீன்பிடிப்புகளை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை.
இதனைக் கண்டித்தும், மீனவர்கள் குறைகளை தீர்க்க வலியுறுத்தி ஜூன் 2 ல் கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் அனைத்து கிராம நாட்டுப்படகு மீனவர்கள் கேளா காதினராய் நடந்து கொள்ளும் இந்த நிர்வாகங்களின் காதுகளுக்கு கேட்கும் வகையில் சங்கு ஊதும் போராட்டம் நடைபெறும் என்றனர்.