ADDED : பிப் 18, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிறுவெத்தி கிராமத்தில் முத்து மாரியம்மன், மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, மூன்று கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பின் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிவாச்சாரியார்களால் கோயில் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.

