/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழப்பிய கல்வித்துறை: மாணவர்களுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு
/
குழப்பிய கல்வித்துறை: மாணவர்களுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு
குழப்பிய கல்வித்துறை: மாணவர்களுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு
குழப்பிய கல்வித்துறை: மாணவர்களுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு
ADDED : செப் 10, 2024 05:08 AM
நாளை (செப்.11) பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி ராமநாதபுரத்திற்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணிக்காக நேற்று வந்துள்ளனர். இவர்கள் தங்குவதற்கு பள்ளிகளில் வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் முதன்மைக் கல்வி அலுவலர் ரவீந்திரன் போலீசார் தங்க உள்ள 82 பள்ளிகளுக்கு செப்.9 முதல் 11 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர் பள்ளி தலைமையாசிர்களுக்கு பேசிய ஆடியோ வெளியானது. இதனால் மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை என சில தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியானது. பெற்றோர் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவில்லை.
குழப்பம் அடைந்த தலைமையாசிரியர்கள் விளக்கம் கேட்டு முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டனர். அப்போது நாங்கள் அனுப்பிய சுற்றரிக்கை விடுமுறை அளிக்க கூறவில்லை என தெரிவித்துள்ளனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா கூறுகையில், பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார் தங்குவதற்கு பள்ளிகளில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் விடுமுறை அளிக்க கூறவில்லை. சில பள்ளிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப மட்டும் கீழ்நிலை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க அறிவுரை வழங்கியுள்ளோம் என்றார்.