/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைப்பதால் ராமேஸ்வரத்தில் இறால் விலையில் குழப்பம் மீனவர்களுக்கு இழப்பு
/
ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைப்பதால் ராமேஸ்வரத்தில் இறால் விலையில் குழப்பம் மீனவர்களுக்கு இழப்பு
ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைப்பதால் ராமேஸ்வரத்தில் இறால் விலையில் குழப்பம் மீனவர்களுக்கு இழப்பு
ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைப்பதால் ராமேஸ்வரத்தில் இறால் விலையில் குழப்பம் மீனவர்களுக்கு இழப்பு
ADDED : நவ 06, 2024 02:19 AM

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஏற்றுமதி வியாபாரிகள் சிண்டிகேட் அமைப்பதால் இறால் விலையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு வருவாய் இழப்பு ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் 1500 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விலை உயர்ந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத்தக்க இறால், கணவாய், நண்டு மீன்களை பிடிப்பது வழக்கம். இதில் இறால் பிரதான மீனாக உள்ளதால் இதனை நம்பியே இப்பகுதி மீனவர்களின் வாழ்க்கையும் உள்ளது.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஜுன் 15ல் மீன்பிடிக்கச் சென்ற ஒரு படகில் 150 முதல் 250 கிலோ இறால்கள் சிக்கின. இதனை ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.420க்கு துாத்துக்குடியில் உள்ள ஏற்றுமதியாளர்கள் வாங்கினார்கள்.
சமீபத்தில் இலங்கை கெடுபிடியால் மீனவர்கள் பலர் மீன்பிடிக்கச் செல்லாத நிலையில் நேற்று 70 படகுகளில் மீன்பிடித்து ராமேஸ்வரம் கரை திரும்பினர். ஒவ்வொரு படகிலும் தலா 40 முதல் 60 கிலோ வரை மட்டமே இறால்கள் சிக்கின. இவற்றை கிலோ ரூ.530 முதல் ரூ.650 க்கு ஏற்றுமதி வியாபாரிகள் வாங்கினர்.
ஏற்றுமதி வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து செயல்படுவதால் இறால் விலையில் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டு வருவாய் இழப்பு ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சகாயம் கூறியதாவது: ஜூன் 15ல் 2 லட்சம் முதல் 3 லட்சம் கிலோ வரை இறால் மீன்கள் சிக்கியதால் ஏற்றுமதி வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து கிலோவுக்கு ரூ. 200 விலை குறைத்தனர். தற்போது அதே வகை இறால்கள் குறைந்த அளவில் சிக்கியதால் விலையை உயர்த்தியுள்ளனர்.
வியாபாரிகளின் சிண்டிகேட்டால் சீசன் நாட்களில் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. எனவே ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் முறையை தடுக்க அரசே விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றார்.

