ADDED : அக் 09, 2024 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானையில் காங்., சார்பில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த நடை பயணத்திற்கு திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, வட்டார காங்., தலைவர்கள் கணேசன், தெட்சிணாமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாடானை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு தெருக்கள் வழியாக நடைபயணம் நடந்தது. நகர தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.