/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி போக்குவரத்து பணிமனை ரோட்டில் சந்தை கடைகளால் நெரிசல்
/
பரமக்குடி போக்குவரத்து பணிமனை ரோட்டில் சந்தை கடைகளால் நெரிசல்
பரமக்குடி போக்குவரத்து பணிமனை ரோட்டில் சந்தை கடைகளால் நெரிசல்
பரமக்குடி போக்குவரத்து பணிமனை ரோட்டில் சந்தை கடைகளால் நெரிசல்
ADDED : டிச 16, 2024 07:07 AM

பரமக்குடி: பரமக்குடி வாரச்சந்தை போக்குவரத்து பணிமனை ரோட்டில் செயல்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் உட்பட வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
பரமக்குடி நகராட்சியில் வாரச்சந்தை வளாகம் உள்ள நிலையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சந்தை கூடுகிறது.
இங்கு ஆடு, மாடு சந்தை உட்பட, காய்கறிகள், பழங்கள், கருவாடு உட்பட அனைத்து வகை பொருட்களும் விற்பனை ஆகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வாரச்சந்தை வளாகத்தில் நவீன சந்தை கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கி நடக்கிறது.
இதனால் கால்நடை சந்தை அருகில் உள்ள மினி விளையாட்டு அரங்கில் செயல்படுகிறது.
மேலும் அனைத்து வகையான கடைகளும் பணிமனை ரோடு உட்பட பரமக்குடி, ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் விரிக்கும்படி உள்ளது.
தொடர்ந்து நாள் முழுவதும் வாகனங்கள் ஒருவொரு நிமிடமும் ஊர்ந்து செல்கின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைவதுடன், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் விபத்து அச்சத்தில் தவிக்கின்றனர்.
ஆகவே நவீன சந்தை கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கும் நிலையில் சந்தையை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.