/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதால் நெரிசல்

ADDED : அக் 07, 2024 10:52 PM

ராமேஸ்வரம்: பள்ளி விடுமுறையால் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்தம் ரோட்டில் வாகனங்களை பல மணி நேரம் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடியும் நிலையில் நேற்று முன்தினம் ஏராளமான மாணவர்கள் பெற்றோருடன் ராமேஸ்வரம் கோயிலில் குவிந்தனர். இவர்கள் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் ஏராளமான வாகனத்தில் வரும் பக்தர்கள் கோயில் மற்றும் நகராட்சி கார் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துகின்றனர். சிலர் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தாமல் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை ரோட்டின் இருபுறமும் நிறுத்துகின்றனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் நடமாட சிரமப்படுகின்றனர். மேலும் இந்த ரோட்டில் அரசு டவுன் பஸ்கள் வந்து செல்வதில் சிக்கலாக உள்ளது. எனவே அக்னி தீர்த்தம் ரோட்டில் நிறுத்தும் வாகனங்களை அப்புறப்படுத்தி பக்தர்கள் சிரமம் இன்றி நடந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---