/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : டிச 05, 2024 05:36 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தது. இதில், ஸ்ரீகுமரன் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 14 வயதிற்குட்ட மிதிவண்டி போட்டியில் 8ம் வகுப்பு மாணவர் ருத்ரதர்ஷன் முதலிடமும், பெண்கள் பிரிவில் மாணவிகள் வி.பிரித்திகா முதலிடமும், கி.விஜிதா 2ம் இடமும் பெற்றனர். நீச்சல் போட்டியில் 7 ம் வகுப்பு மாணவர் முவின்குமார், 50,100 மீட்டர் பிரீ ஸ்டைல் போட்டியில் முதலிடமும் பெற்றுள்ளார்.
பெண்கள் நீச்சல் பிரிவில் 7 ம் வகுப்பு மாணவி சந்தீஸ்வரி 50 மீட்டர் பிரீ ஸ்டைல், பேக்ஸ் டிரோக்கில் 2 ம் இடமும் பெற்றார். இவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளிச் செயலாளர் ராஜா, வட்டார கல்வி அலுவலர் மல்லிகா, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.