/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிலம்பம் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
சிலம்பம் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 09, 2025 05:03 AM

பெரியபட்டினம்: ராமநாதபுரத்தில் நடந்த மண்டல, மாவட்டஅளவிலான சிலம்பப் போட்டியில் வண்ணாங்குண்டு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வென்றனர்.
ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் வேதிகா முதலிடம், கனிஷ்கா, வர்ஷினி ஆகியோர் இரண்டாமிடம், 8 வகுப்பு மாணவி லசியா மூன்றாமிடம் பெற்றனர். இவர்கள் மாநில போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். ஆண்களுக்கான பிரிவில் 9ம் வகுப்பு மாணவர் ஹரிஷ் நந்தன், 6ம் வகுப்பு மாணவர் விகாஸ் மூன்றாமிடம் பிடித்தனர்.
ஜன.5ல்சென்னையில் நடந்த கராத்தே, குமித்தே பிரிவில் வேதிகா இரண்டாமிடம் பெற்று தென்னிந்திய கராத்தே போட்டியில்பங்கேற்பதற்கு தகுதி பெற்று உத்தரகாண்ட் செல்ல உள்ளார்.சாதித்துள்ள மாணவர்கள், பயிற்சி அளித்த கராத்தே பயிற்றுநர் சசிகுமார் ஆகியோரை பள்ளி தாளாளர் பாண்டி,  முதல்வர் உமாராணி, நிர்வாக அலுவலர் கதிரேசன், ஆசிரியர்கள்  பாராட்டினர்.

