/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூலை 28, 2025 05:27 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடந்த பேச்சுபோட்டியில் வென்ற மாணவர்களுக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பரிசு, பாராட்டுச் சான்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நாட்டுக்காகப் பாடுபட்ட சட்ட மேதை அம்பேத்கர், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பேச்சுப்போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றுகளை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
கல்லுாரி, பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2ம் இடம் ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000 மற்றும் அரசு பள்ளியை சேர்ந்த இரு மாணவர்களுக்கு தலா ரூ.2000 சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சபீர் பானு, முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பங்கேற்றனர்.