/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசிய திறனாய்வு தேர்வில் வென்றவர்களுக்கு பாராட்டு
/
தேசிய திறனாய்வு தேர்வில் வென்றவர்களுக்கு பாராட்டு
ADDED : ஏப் 18, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை:
கீழக்கரை அருகே மாயாகுளம் நாடார் மகாஜன சங்கத்தின் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப் பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் இரு மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
எட்டாம் வகுப்பு மாணவர்கள் அருண் விஜய், லித்திஷா ஆகியோர் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர், தலைமையாசிரியர், பள்ளி கமிட்டி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

