/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க காங்., கோரிக்கை
/
மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க காங்., கோரிக்கை
மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க காங்., கோரிக்கை
மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க காங்., கோரிக்கை
ADDED : அக் 09, 2025 11:13 PM

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் 47 பேரை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மீனவர் காங்., தேசிய தலைவர் எம்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கை:
2014 முதல் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி பலவீனமாக இருப்பதால் தான் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சித்திரவதை செய்கின்றனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை மூழ்கடித்தும், சேதப்படுத்தியும் வருகின்றனரக. 2018ல் இலங்கையில் அமல்படுத்திய புதிய சட்டத்தின் கீழ் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது.
மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 180 படகுகளை அரசுடைமையாக்கி, படகுகளை உடைத்து விறகாகவும், இரும்பு பொருள்களை காயிலான் கடைக்கு இலங்கை அரசு விற்கிறது. இச்செயலை பிரதமர் மோடி அரசு கண்டித்து படகுகளையும், மீனவர்களையும் மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இச்சூழலில் நேற்று முன்தினம் தமிழகம், புதுச்சேரி காரைக்காலை சேர்ந்த 47 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது கண்டனத்திற்குரியது. மீனவர்களையும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 5 படகுகளையும் போர்க்கால அடிப்படையில் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.