/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தலைவர் நியமிக்கல: காங்., நிர்வாகிகள் புலம்பல்

ADDED : டிச 08, 2024 06:25 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டத்தலைவரை இதுவரை நியமிக்கவில்லையே என நிர்வாகிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தில் காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சியைப் பலப்படுத்த கிராம ஊராட்சி வார்டுகள், நகர, வட்டார, மாவட்ட அளவிலான கமிட்டிகள் அமைப்பதற்காக வட்டார, நகர தலைவர்கள் கூட்டம் நடந்தது. திருவாடானை எம்.எல்.ஏ., ராம. கருமாணிக்கம் தலைமை வகித்தார்.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம்பாண்டியன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு காங்., கமிட்டி சார்பில் மாநில பார்வையாளர்களாக டாக்டர் செல்வராஜ், அடையாறு பாஸ்கரன் பங்கேற்றனர்.
மாநில செயலாகளர் ஆனந்தகுமார், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜோதிபாலன், மகளிர் காங்., ராமலட்சுமி, சேவாதளம் கணேசன், முன்னாள் ராணுவத்தினர் துறை மாவட்டத்தலைவர் கோபால், ஓ.பி.சி., பிரிவு தலைவர் பாஸ்கரசேதுபதி, ஆர்ட் கணேசன் உட்பட பலர் பேசினர்.
இதில் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தலைவர் நியமிக்கப்படாமல் உள்ளது. அப்படி இருந்தும் ராமநாதபுரம் மாவட்ட காங்., கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநில தலைமை விரைவில் மாவட்டத்தலைவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேசினர்.