/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காங்., கட்சியினர் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு
/
காங்., கட்சியினர் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு
காங்., கட்சியினர் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு
காங்., கட்சியினர் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு
ADDED : டிச 25, 2024 08:26 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் காங்., கட்சியினர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஊர்வலமாக சென்று ஜனாதிபதிக்கு அனுப்ப கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம் பாரதி நகரில் இருந்து நடந்த ஊர்வத்திற்கு திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் தலைமையில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜராம் பாண்டியன் கோபால், மாவட்ட ஊராட்சி துணை சேர்மன் வேலுச்சாமி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் அகில இந்திய மீனவர் காங்., தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ நிர்வாகிகள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனுவை கொடுத்தனர்.
மகளிர் காங்., ராமலட்சுமி, வட்டார தலைவர்கள் சேகர், கணேசன், சேதுபாண்டியன், கனி சுப்பிரமணியன், வேலுச்சாமி, கந்தசாமி, அன்வர் அலி நத்தர், ஆறுமுகம் கோபால் உட்பட பலர் கேற்றனர்.