/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மன்மோகன்சிங் மறைவுக்கு காங்., கட்சியினர் அஞ்சலி
/
மன்மோகன்சிங் மறைவுக்கு காங்., கட்சியினர் அஞ்சலி
ADDED : டிச 28, 2024 07:22 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் காங்., கட்சியினர் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மேகான் சிங் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம்பாண்டியன் கோபால் தலைமை வகித்தார். மாவட்டத்துணைத்தலைவர்கள் காமராஜ், துல்கிப்கான், காவனுார் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் கோபி, மகளிர் காங்., ராமலட்சுமி பங்கேற்றனர்.
* பரமக்குடி: பரமக்குடி காந்தி சிலை முன்பு முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு அனைத்து கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்., மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜோதிபாலன் தலைமை வகித்தார். சிறுபான்மை மாநில துணை தலைவர் அப்துல் அஜீஸ், மாநில செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி,அனைத்து கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.